கேள்வி : எனக்கு இப்போது கிரகநிலை சரியில்லை. சூரியன் நீச்சம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் யாருக்கேனும் மரணம் நிகழுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதில் இருந்து எப்படி தப்பிப்பது?
– என்.ரவீந்தரன், சென்னை.
ஞானகுரு :
பிரமாண்டத்திலும் பிரமாண்டமான கிரகங்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்கின்றன. அதன் பார்வையில் மனிதர்கள் கேவலமான துகள்கள். அப்படிப்பட்ட கிரகங்கள் உன்னுடைய வாழ்க்கையை ஒரு பொருட்டாக மதித்து திசை திருப்புகிறது என்று நீ நம்பினால், உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.