கேள்வி : நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எங்கே கிடைக்கும் நிம்மதி?
– மணி ஸ்ரீதர், விழுப்புரம்
ஞானகுரு :
தேடினால் கிடைக்காது. மனிதனாகப் பிறந்த யாரும் நிம்மதியாக அக்கடாவென்று வாழவும் முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றாலும் நிம்மதியை வாங்க முடியாது. இந்த உலகில் கல்லும் மண்ணும்தான் நிம்மதியாக இருக்கின்றன. நீயும் அப்படி மாறினால் நிம்மதி கிடைக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட நிம்மதி தேவைதானா..? பரபரப்பும் துடிதுடிப்புமாக வாழப்பழகு. உழைத்துக் களைத்த ஓய்வில் கொஞ்சநேரம் நிம்மதியைத் தொட்டுப் பார்க்கலாம்.