கேள்வி : என் ஒரே மகனின் ஜாதகம் அனுப்பி இருக்கிறேன். அவனுக்கு கிரிக்கெட், டென்னிஸ் இரண்டிலும் ஆர்வம் இருக்கிறது. எந்த விளையாட்டில் இறக்கினால் புகழும் வெற்றியும் பெறுவான்?

– எஸ்.மருதீஸ்வரி, மங்களூர்

ஞானகுரு : குழந்தைக்கு உடல் பலத்தைவிட மன பலம்தான் அவசியம். அதனால் உன் குழந்தைக்கு முதலில் பரமபதம், தாயம், ஆடு புலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களை அறிமுகம் செய். தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இருக்கும்போது ஒற்றைப் பாம்பு  தட்டிவிடலாம் என்ற உண்மை புரிய வேண்டும். தோல்வி, வெற்றி இரண்டையும் சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை மகனுக்கு வந்ததும், தேர்வு செய்யும் பொறுப்பை அவனுக்குக் கொடு. விளையாட்டு என்பது வெற்றிக்காகவும் புகழுக்காகவும் அல்ல என்பதை புரிந்துகொள்பவனால்தான் வெற்றி பெறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *