கேள்வி : தியானத்தில் என்னால் முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. மனம் அலைபாய்கிறது. என்னால் ஆன்மிகத்தில் மேன்மை அடையவே முடியாதா?
- எம்.கிருஷ்ணன், திருச்சி
ஞானகுரு :
மனம் என்பது காட்டாற்று வெள்ளம் மாதிரி. அதனை தடுத்து நிறுத்தமுடியாது என்றாலும் திசை மாற்ற முடியும். ஆம், நீ தீவிரமாக ஆசைப்படும் விஷயத்தில் மனதைத் திருப்பு. சோம்பேறித்தனம் இல்லாமல் சோர்வு இல்லாமல் ஒரு வேலையை உன்னால் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யமுடிகிறது என்றால், அதுதான் உண்மையான தியானம்.