கேள்வி : மரணம் எப்படி நிகழ வேண்டும்?
– என்.அருணா, சென்னை
ஞானகுரு :
படுக்கையில் படுத்ததும் எந்த நொடியில் தூக்கம் கண்களைத் தழுவுகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறாயா? அதுபோல் உனக்குத் தெரியாமலே உன்னிடம் இருந்து உயிர் பிரிய வேண்டும். பூக்களில் இருந்து வாசம் வெளியேறுவதைப் போல், ஊதுபத்தியில் இருந்து புகை வெளியேறுவதைப் போல் இயல்பாக உயிர் வெளியேற வேண்டும். இப்படி ஒரு மரணத்துக்காக அன்புடன் காத்திரு. உன் ஆசைப்படியே நடக்கும்.