கேள்வி : ஐயா, எனக்கு திருமணமாகி ஏழு வருடங்களாகி விட்டன. ஒரு குழந்தை இருக்கிறது. தினம்தினம் மனைவியுடன் சண்டை நடக்கிறது. வீட்டுக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது. நான் அவளை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்வதா அல்லது சாமியாராகி விடலாமா?
– சி.பரந்தாமன்
ஞானகுரு : ஆணின் ரத்தத்தில் பெண்ணை அடிமையாக்கும் வெறி இருக்கிறது. பெண்ணின் ரத்தத்தில் அன்பின் மூலம் ஆணை வளைத்துப்போடும் தந்திரம் உண்டு. இருவரில் ஒருவர் ஜெயித்துவிட்டால் அந்த வீடு அமைதியாகிவிடும். ஆனால் நீ தோற்கவும் செய்யாமல் ஜெயிக்கவும் செய்யாமல் ஏழு வருடங்களாக போராடிக்கொண்டே இருக்கிறாய். வெற்றிகொள் அல்லது தோற்றுப் போ. ஒரு பெண்ணை சமாளிக்க முடியாத உன்னால் எப்படி வயிற்றை ஜெயிக்க முடியும்?