வெயிலுக்குப் போனால் கருத்துப்போவாய்’ என்ற குரல்தான் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளை வெளியே தலைகாட்ட விடுவதில்லை. ஏனென்றால், வெள்ளை நிறம் என்பதுதான் நம் நாட்டில் அழகாக மதிக்கப்படுகிறது.

அதனாலே, குழந்தைகள் பகல் நேரத்தில் வெளியே தலை காட்ட விரும்புவதில்லை. அப்படியே வெளியே போகவேண்டிய சூழல் ஏற்பட்டாலும், குடை பிடிப்பது, முகத்தில் எதையாவது கட்டிக்கொள்வது என்று சூரியனை தொடவே விடுவதில்லை. இதுதான், 25 வயதிலே முதுகுவலி, மூட்டுவலி, மன அழுத்தம் போன்றவை தோன்றக் காரணமாகிறது.

காலையில் எழுந்ததும் சூரியனை கும்பிடுவதுதான் தமிழன் கலாசாரம். மண்ணையும், பயிர்களையும், உயிர்களையும் வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும், சூரிய நமஸ்காரத்தின் மகிமையை மருத்துவர்கள் அறிவார்கள், ஆனாலும் அவர்கள் வலியுறுத்துவதில்லை. ஏனென்றால், அவர்களால் வைட்டமின் டி மாத்திரைகள் பரிந்துரைக்க முடியாமல் போய்விடும் என்ற கவலைதான்.  

இலவச வைட்டமின் டி சூரியனிடம் மட்டுமே நிறையநிறையக் கொட்டிக் கிடக்கிறது. அதிகாலை, மதியம், மாலை என்று எந்த நேரத்திலும் சூரியக் கதிர்களை ஆரத் தழுவிக் கொள்ளலாம் என்றாலும் அதிகாலை நேரமே சூரியக் கதிர்களை பெறுவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது.

சூரியக் கதிர்கள் நேரடியாக பட்டால், தோல் புற்றுநோய் வரலாம் என்று சிலர் பயம் காட்டுவார்கள். இது, வெள்ளையர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய். அதுவும் சூரியனை கண்ணில்கூட பாராமல், திடீரென அதிகம் வெயிலில் திரிந்தால் வரலாம். இந்தியர்களுக்கு தோல் புற்றுநோய் உருவாவதில், சூரியனுக்கு அத்தனை பங்கு இல்லை என்பதே உண்மை.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர், தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தாலே போதும், பிரச்னைகள் தீர்ந்துவிடும்.  மேலும்,  சூரிய ஒளி படாமல் பூட்டிய அறைகளுக்குள் இருப்பவர்களுக்குத் தோன்றும் மன அழுத்தம், முதுமையில் தோன்றும் ஞாபகக் குறைவு போன்ற நோய்களையும் சூரியன் தீர்த்துவைக்கிறது.

ஒரு குழந்தை தினமும் காலையில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருநதால், அந்தக் குழந்தை உயரமாக வளரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும். ரத்த வெள்ளை அணுக்களில் சூரிய ஒளி படும்போது, அது தொற்றுகளை எதிர்த்துப்  போராடுவதில் கூடுதல் பலம் பெற்று  நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இளவயதில் தோன்றும் நீரிழிவு மற்றும் தோல் நோய்களை தடுப்பதற்கும் சூரியக் கதிர்கள் மருத்துவராக பணியாற்றுகிறது. ஆகவே, ஒரு நாளும் சூரியனை தரிசிக்க மறக்கவே வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *