அக்னி மருத்துவம்
சூரிய ஒளியைவிட சிறந்த மருத்துவர் இந்த உலகில் இல்லை. ஆனால், அதைத்தான் எதிரியாக நினைத்து ஓடி ஒளிகின்றனர் மக்கள். சூரியக் குளியல் பற்றி இளம்பெண் ஒருவருக்கு பாடம் நடத்தினார் ஞானகுரு.
சந்தேகம் விலகாமல் நின்ற இளம்பெண் மேலும் ஒரு கேள்வி எழுப்பினாள்.
‘’சாமி, சூரியக் கதிர் உடலில் பட்டுவிட்டால் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்களே..?’’
கடகடவென சிரித்தார் ஞானகுரு.
‘’இதுவரை எந்த விலங்கினமாவது, பறவையாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பார்த்திருக்கிறாயா பெண்ணே. அவை சூரியனின் அன்புக் குழந்தைகள். உன் உடல் சூரிய வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் வரையில், சூரியக் கதிர்களை ஏந்திக் கொள்ளலாம். வைட்டமின் டி மற்றுமின்றி, உடன் மற்ற எல்லா வைட்டமின்களும் தேவையான அளவு உடலுக்கு கிடைப்பதற்கு உடலுக்கு அக்னியை மருந்தாகவே எடுத்துக் கொள்ளலாம்….’’
‘’அப்படியென்றால் உடல் சூடாகிவிடாதா..?’’
‘’உன் உடலில் அக்னி குறையாமலும் மிகாமலும் இருப்பதற்கு இரண்டு வழி இருக்கிறது. முதலில் பின்னிரவுக்குள் தூங்கி அதிகாலையில் விழித்துவிடு. அதேபோன்று, நன்கு பசிக்கும் நேரத்தில் உணவை எடுத்துக்கொள்…’’
’’நிறைய தண்ணீர் குடிக்க வேண்டுமா..?’’
‘’தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடித்தால் போதும். உடலுக்குத் தேவை என்றால் கேட்டு பெற்றுக்கொள்ளும்.. அக்னி தத்துவம் உன் உடலில் சமநிலையில் இருக்கும் வரையில் புற்று நோய் மட்டுமல்ல, தோல் நோயும் நெருங்கவே செய்யாது. தைரியமாக சூரியனை மருத்துவனாக ஏற்றுக்கொள் பெண்ணே…””
சந்தோஷமாகத் திரும்பினாள் இளம் பெண்.