எனக்கு மட்டும் வாழ்வில் சோதனை மேல் சோதனையாக வந்துகொண்டே இருக்கிறது. ஏன் கடவுள் என்னை இப்படி தண்டிக்கிறார்?
-சி.லட்சுமணன், சென்னை.
ஞானகுரு :
கடவுளுக்கு வேறு வேலையே இல்லையாம். அதனால் உன்னுடன் விளையாடுகிறார். முட்டாள்தனமாக சிந்தியாதே. ஒரு செடியில் பல கத்திரிக்காய்கள் காய்க்கிறது. அது அந்த செடிக்குப் பாரமாக இருக்குமா..? இல்லவே இல்லை.
அந்த செடி எவ்வளவு சுமக்க முடியுமோ, அந்த அளவுக்கே காய்க்கிறது. அதுபோலவே, உன்னால் சுமக்க முடிபவையே, உனக்கு சோதனையாக தரப்படுகிறது. அதனை எதிர்கொள்வதும், ஒளிந்துகொள்வதும் உன்பாடு.