எனக்கு இரு சகோதரர்கள். ஆனால் யாரும் என் மீது அக்கறை செலுத்த மாட்டேன் என்கிறார்கள். இதுதான் பாசமா?
-பி.ரமேஷ்குமார், திருவண்ணாமலை
ஞானகுரு :
அன்பு, அக்கறை போன்றவை நீ விதைக்கும் விதையைப் போன்றது. எதைப் போடுகிறாயோ அதுவே முளைக்கும். நீ அவர்களுடன் எந்த அளவுக்கு உறவுடன் இருக்கிறாயோ… அதுவே உனக்குத் திரும்பக் கிடைக்கும். ஆனால் ஒன்று, ‘உன்னைப் பற்றி கவலை இல்லை’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அதன் பின்னே ஓர் அக்கறை இருக்கும்.
ஒவ்வொரு, ‘சும்மா சொன்னேன்’ என்பதற்குப் பின்னாலும் ஓர் அர்த்தம் இருக்கும். ஒவ்வொரு ‘தெரியாது’ என்பதற்குப் பின்னாலும் தெரிந்தே இருக்கும். எல்லா வெறுப்புகளுக்குப் பின்னாலும் விருப்பும், எல்லா பொய்களுக்குப் பின்னாலும் உண்மையும் கலந்தே இருக்கும்.
அதனால், நீ முதலில் மனதை திறந்துவை, சிட்டுக்குருவிகள் உள்ளே வரட்டும்.