அரசுப் பணியில் இருக்கிறேன். பெரிய எதிர்காலம் இல்லை. வெட்டி முறிக்கும் அளவுக்கு வேலையும் இல்லை. தொந்தரவு இல்லாத சம்பளம் என்றாலும், வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை… ஏன்?
-சி.வெங்கடேஸ்வரன், சென்னை.
ஞானகுரு :
எளிதில் கிடைத்தால் விருந்து சாப்பாடும் எரிச்சலாகத்தான் இருக்கும். பிடித்தமான பணி என்றால் நீ வேலை பார்க்கவேண்டிய அவசியமே இராது. ஆம், அதுவே உன் பொழுதுபோக்காகவும் சந்தோஷமாகவும் அமைந்துவிடும்.
அதனால்தான் விஞ்ஞானிகளால் உண்ணாமல், உறங்காமல்கூட எத்தனை நாட்களானாலும் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்க முடிகிறது. பிடித்த வேலையைக் கண்டுபிடிப்பதும் பெஞ்சைத் தேய்த்து சம்பளம் வாங்குவதும் இனி உன்பாடு.