கடவுளை நான் எங்கே தேடவேண்டும்?
-ஜி.பார்த்தசாரதி, நெல்லை.
ஞானகுரு :
நீ குழந்தையாக இருந்தவரை, கடவுள் என்றால் என்னவென்றே அறியாமல் இருந்தாய். எப்போது கடவுள் பற்றி உனக்குக் கற்பிக்கப்பட்டதோ, அன்று முதல் கோயில்களிலும், குளத்திலும், பூஜை அறையிலும் தேடத் தொடங்கிவிட்டாய். தொலைந்து போன பொருட்கள் மட்டுமே தேடினால் கிடைக்கும். கடவுளை நீ எங்கே தொலைத்தாயோ அங்கே போய் தேடு. அதுசரி, கடவுளைத் தேடிக் கண்டுபிடித்து என்ன செய்யப் போகிறாய்? அதை முதலில் முடிவு செய்துவிட்டு தேடு.