மனிதர்களிடம் இருந்து உடனடியாக பிரிக்கவேண்டியது எது சாதியா… மதமா? -சி.தெய்வநாயகம், திருப்பூர்
ஞானகுரு :
சந்தேகம் இல்லாமல் சாதிதான். உடல் அமைப்பு காரணமாக நீ ஆண் அல்லது பெண் என்று பிரிந்து இருக்கிறாய். வாழும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவனாக இருக்கிறாய். பேசும் மொழியைப் பொறுத்து வெவ்வேறு இனத்தவனாக இருக்கிறாய்.
வணங்கும் ஆண்டவனை முன்னிட்டு வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவனாக இருக்கிறாய். ஆனால் என்ன காரணத்துக்காக சாதி உருவானது… ஏன் பிரிந்து நிற்கவேண்டும் என்று யோசியுங்கள். காரணமே இல்லாத சாதியை இன்னமும் விரட்டாமல் இருப்பதுதான் மனிதகுலம் செய்யும் மாபாதகம்.