1. நீ எண்ணங்களில் அழகாக இரு, தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை வேண்டாம்.
2. வாழ்க்கையில் ஒன்றை இழக்கும்போது, இதைவிட பெரிதாக ஒன்று கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கை கொள்.
3. கைக்கு எட்டும் தூரத்தில் வெற்றி இருக்கும்போது, முயற்சியை கைவிடுவதில்தான் தோல்வி நிகழ்கிறது.
4. நேரமும், வாய்ப்பும் எல்லோருக்கும் எப்போதும் இருக்கவே செய்கிறது. முயற்சி எடுப்பவர்கள் கண்களுக்கு மட்டுமே அது புலப்படும்.
5. எவரையும் குறை கூறும் முன், அந்த இடத்தில் நீ என்ன செய்திருப்பாய் என்று ஒருமுறை எண்ணிப் பார்.
6. கடினமாக உழைப்பவன் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை, கவனமாக உழைப்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்.
7. நீ தலைவனாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும்.
8. இழந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம். காலத்தையும் வார்த்தைகளையும் பிடிக்க முடியாது.
9. சின்னச்சின்ன மகிழ்ச்சியில்தான் சொர்க்கம் இருக்கிறது. அது தெரியாமல் பெரிய மகிழ்ச்சியைத் தேடி வீணாகாதே.
10.தனிமையில் இருப்பதாக எண்ணி கலங்காதே. இந்த ஒட்டுமொத்த உலகமும் உனக்காகவே காத்திருக்கிறது.