
மனம்விட்டு பேசுங்கள்..!
உலகின் ஒவ்வொரு உயிருக்கும் முதல் தேவை உணவு. அதன்பிறகு உயிரை தக்கவைக்கவும், வாழ்வை வளமாக்கவும் நாள்தோறும் போராடிக்கொண்டு இருக்கிறான். இந்த போராட்டம் அனைத்து மனிதருக்கும், எல்லா நேரமும், எல்லா வகையிலும் சுபமான முடிவுகளை மட்டும் கொடுப்பதில்லை. நாட்டின் வலுவான தலைவரும், உலகப்பெரும் கோடீஸ்வரரும், முற்றும் துறந்த ஞானியரும் இந்த வலையில் இருந்து தப்ப முடியாது.
சின்னச்சின்ன தோல்விகளும், ஏமாற்றங்களும், வருத்தங்களும், பொறாமைகளும், போட்டிகளும், உடல்நலக் குறைபாடுகளும் மனிதனை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன. இந்த சிக்கல்கள் மனிதனின் மனதில் கசடு போன்று தங்கிவிடுகிறது. அந்த கசடுகள் அதிகரிக்க, அதிகரிக்க உடல் மாபெரும் இருட்டுக்குள் தள்ளப்பட்டு திசை தெரியாமல் தவிக்கிறது.
ஒருவருடைய வேதனை, வலி வேறு ஒருவரின் ஆனந்தமாக இருப்பது இயல்புதான். தாயின் பிரசவ வலியும் குழந்தையின் அலறலும் வெளியே காத்திருப்பவர்களுக்கு ஆனந்தமான ஒலியே. ஓட்டப் பந்தயத்தில் ஒன்பது பேரின் தோல்வியில்தான் ஒருவரது வெற்றி இருக்கிறது. இவை எல்லாமே வாழ்க்கையின் இன்னொரு பக்கம்.
இன்பத்தை மனதார ஏற்றுக்கொள்வது போல், வாழ்வின் துன்பத்தையும் சில நேரங்களில் மனதார ஏற்கத்தான் வேண்டும். தந்தை இறந்துகிடக்கும் நேரத்தில், மகளுக்கு இப்படி ஆறுதல் சொல்வது நகைச்சுவையாக இருக்கும் என்றாலும், அதுதான் உண்மை. ஆனால், இப்படி பேசுவதுதான் வேதனைக்கும் வலிக்கும் தீர்வு. பிறரிடம் துன்பத்தை, வலியை, தோல்வியை பகிர்வதுதான், அதனை குறைக்கும் எளிய வழி.
எல்லோருக்கும் துன்பத்தை கொட்டித் தீர்ப்பதற்கு தாயின் தோள்கள் எப்போதும் இருப்பதில்லை. அனைத்து மக்களுக்குமான தோளாக ஞானகுரு இருக்கிறார். சோகங்களைக் கேட்பதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் ஞானகுரு இருக்கிறார். பேசித் தீர்ப்போம் வாருங்கள்.
தொடர்புகொள்ளுங்கள்…
Contact Us
Ph : 8148614112 and Email : gyanaguruofficial@gmail.com