இளநரைக்கு இதுதான் மருந்தா..?

தலையில் லேசாக நரை விழுந்ததும் பலரும் துடித்துப் போகிறார்கள். உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று என்னென்னவோ மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். இளநரையைத் தடுக்கும் வைட்டமின் ஒன்று உண்டென்றால், அது வைட்டமின் – பி5தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து ‘கால்சியம் பென்டோதினேட்’ எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வனர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி தரைப்பது தடுக்கப்படுகிறது.

இளநரையுடன் காலில் எரிச்சல், மரத்துப் போதல் போன்ற பிரச்னைகளும் இருந்தால் அது நிச்சயம் வைட்டமின் பி5 குறைபாடு என்பதை உறுதிபடுத்த முடியும். நரம்பு மண்டலச் செயல்பாட்டுக்கும், ரத்தத்தில் சிவப்பணுக்கள் சரியான அளவில் உற்பத்தியாவதற்கும் வைட்டமின் – பி5 முக்கியமாகத் தேவைப்படுகிறது.

வைட்டமின் பி5 அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயாபீன்ஸ், நிலக்கடலை. பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது. இவை தவிர உமி, தவிடு, கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், காரட், காலிஃபிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகிய உணவுகளிலும் இந்த வைட்டமின் உள்ளது. பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டிறைச்சி, ஈரல் முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் அதிகமுள்ளது.